கோவை ஈஷா யோக மையத்தில் மகாசிவராத்திரி விழாவையொட்டி, விடிய விடிய நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
கோவை வெள்ளியங்கிரி மலையில் உள்ள ஈஷா யோக மையத்தில் 112 அடி ஆதியோகி சிலை முன் சிவராத்திரி திருவிழா,தியானலிங்கத்தில் பஞ்சபூத ஆராதனை, லிங்கபைரவி தேவி மஹாயாத்திரை மற்றும் தியான நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
அப்போது பேசிய சத்குரு ஜக்கி வாசுதேவ் இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர், குற்றம் மற்றும் பகை உணர்வால் நடக்கவில்லை என்றும், அஞ்ஞானத்தால் பாதிப்புகளை சந்திப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஈஷாவின், 'சவுண்ட்ஸ் ஆப் ஈஷா' மற்றும் ஈஷா சம்ஸ்கிருதி குழுவினர் தங்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.
அசாமைச் சேர்ந்த பின்னணி பாடகர் பப்பான், ஹிமாச்சல் பிரதேச பாடகர் ஹன்ஸ்ராஜ் ரகுவன்ஷி ஆகியோர் தங்களின் இசை அர்ப்பணிப்பை வழங்கினர்.
தெலுங்கு பாடகி மங்லி, பீகாரின் தீபாளி சகாய், பாலிவுட் பின்னணி பாடகர் மாஸ்டர் சலீம் ஆகியோர் சிவபெருமான் குறித்த பாடல்களைப் பாடினர்..
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், இந்தியாவுக்கான கொலம்பியா தூதர் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.