தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது மயக்க மருந்து செலுத்தியதில் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தில், அப்பெண்ணின் தந்தைக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ஷீலா செல்வராணி என்ற பெண்ணுக்கு அறுவை சிகிச்சைக்காக மயக்க மருந்து செலுத்திய மருத்துவர்கள் குமரன் மற்றும் முத்துகுமரன் ஆகியோர் கவனக்குறைவாக செயல்பட்டதாகவும் இதனால் தன் மகள் உயிரிழந்ததாகவும் தந்தை ஆபிரகாம் புகார் தெரிவித்தார்.
இந்நிலையில், இரு மருத்துவர்களிடமும் இருந்து தலா 2 அரை லட்சம் ரூபாயை வசூலித்து அப்பெண்ணின் தந்தையிடம் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.