தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தின் சில மாவட்டங்களில் 4,5 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த இரு நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும், 3-ந் தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
4,5 ஆகிய தேதிகளில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரத்தில் கனமழையும் பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மழைக்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் மற்றும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 5 நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.