உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தமிழக மாணவர்கள் அயலக நலத்துறையில் பதிவு செய்யும் பட்சத்தில் அவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் எதிரொலியாக, வெளிநாடு சென்று படித்து வரும் தமிழக மாணவர்களுடைய விவரங்கள் இனி வரும் காலங்களில் சேகரித்து வைக்கப்படும் என கூறினார். மாணவர்கள் 2 ஆயிரம் பேர் உட்பட உக்ரைனில் 5 ஆயிரம் தமிழர்கள் இருப்பதாகவும், அவர்கள் பதிவு செய்யும் பட்சத்தில் உடனடியாக அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
டெல்லி வந்தடைந்த தமிழக மாணவர்களை அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் செயலாற்றி வரும் சிறப்பு அதிகாரி அதுல்ய மிஸ்ரா சென்னைக்கு அனுப்பி வைக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் உக்ரைனில் இருந்து வந்தவர்கள் ஆன்லைன் வழியில் கல்வியை தொடர ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.