தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி, முகாமை துவக்கி வைத்தோடு, சொட்டு மருந்து போட்டுக் கொண்ட குழந்தைகளுக்கு பரிசு பொருளும் வழங்கினார்.
தமிழகம் முழுவதும் மொத்தமாக 43ஆயிரத்து051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் சொட்டு மருந்து போட்டுக் கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. முகாமில் 57லட்சத்து61ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி சுகாதார பணியாளர்கள் உட்பட சுமார் 2 லட்சம் பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் சுமார் 18 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.