கரூர் மாவட்டம் சின்னமநாயக்கன்பட்டியில் உள்ள அரசுப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அம்மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், வகுப்பறையில் மாணவ, மாணவிகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார்.
அப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இடிக்கக் கூடிய கட்டிடங்கள், சத்துணவு சமையல் கூடம், கழிவறை உள்ளிட்ட பகுதிகளை ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து 10ம் வகுப்பு வகுப்பறைக்குள் சென்ற அவர், அங்கிருந்த மாணவர்களுக்கு கணிதப்பாடம் எடுத்தார். மேலும், கரும்பலகையில் எழுதியிருந்த பார்முலாவை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.