மதுரை மாவட்டத்தில் ஹிஜாப் சர்ச்சை எழுந்த மேலூர் நகராட்சிக்குட்பட்ட 8-வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் பூதாகரமாகி உள்ள நிலையில், மேலூர் நகராட்சிக்குட்பட்ட 8-வது வார்டு பகுதியில் உள்ள அல் அமீன் உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் கடந்த 19-ம் தேதியன்று, வாக்களிக்க சென்ற முஸ்லீம் பெண்கள் சிலரை ஹிஜாப்பை கழற்றிவிட்டு வாக்களிக்க வருமாறு பாஜக கட்சியை சேர்ந்த முகவர் கிரிராஜன் என்பவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அந்த வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வெறும் 10 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்திருப்பதுடன் அங்கு திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.