சென்னை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் தந்தையை கட்டிப்பிடித்து வாக்கு எண்ணும் மையத்தில் இளம் திமுக பெண் வேட்பாளர் கண்ணீர் விட்டார்.
ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட 160 ஆவது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பிருந்தாஸ்ரீ முரளி, அதிமுக வேட்பாளர் லதாவை காட்டிலும் 5755 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் அவரிடம் வழங்கப்பட்டது. அப்போது தனது தந்தை முரளியை கட்டிப்பிடித்து ஆனந்தக் கண்ணீர் விட்டார். இதைக்கண்ட தந்தையும் தனது மகளை கட்டியணைத்து ஆனந்தக் கண்ணீர் விட்டார். இதைப்பார்த்த அங்கு பணியில் இருந்த தேர்தல் அதிகாரிகள் அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர்.