ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 31 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. திம்மா நாயுடு பாளையம் வனப் பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது 10க்கும் மேற்பட்டோர் செம்மரக்கட்டைகளை சுமந்து வருவது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்களை போலீசார் விரட்டி சென்று பிடிக்க முயன்றபோது 2பேர் மட்டும் சிக்கினர். மற்றவர்கள் அனைவரும் செம்மரக்கட்டைகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். விசாரணையில் அவர்கள் இருவரும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.