நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகள் நடந்த வாக்குச்சாவடிகள் அனைத்திலும் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்குப்பதிவின்போது, பாஜகவினர் தாக்கப்பட்டதாக கூறி சில வீடியோக்களை வெளியிட்டார். வாக்குச் சாவடியின் உள்ளேயே பணப் பட்டுவாடா செய்ததாகவும், சென்னையில் 40 வாக்குச்சாவடிகள் வரை கைப்பற்றப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தேர்தல் அமைதியாக நடந்ததாக கூறுவது நகைப்புக்குரியது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.