தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதத்திற்கு பிறகு முதன்முறையாக தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 949 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சென்னையில் மேலும் 223 பேருக்கும், கோவையில் மேலும் 136 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதியானது.
பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 3 ஆயிரத்து 172 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 3 பேர் உயிரிழந்த நிலையில், 15 ஆயிரத்து 938 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.