மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தனியார் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 2 தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பிஸ்மி ஃபிஷரீஸ் என்ற இறால் தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென தொழிற்சாலையில் இருந்த கொதிகலன் பயங்கர சப்தத்துடன் வெடித்தது.
இதில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அருண்ஓரான், பல்ஜித்ஓரான் என்ற இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொதிகலன் வெடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.