வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், நாளைய தினம் தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
நாளைமறுநாளும் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 24-ம் தேதி தென் தமிழகம், திருப்பூர், கோவை, நீலகிரி, மற்றும் டெல்டா மாவட்டங்ளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, காலை வேளையில் லேசான பனிமூட்டம் நிலவும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.