மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் கையெழுத்து இல்லாமல் வாக்குப்பதிந்ததாக புகார் எழுந்த நிலையில், அங்கு தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டில் பெண்களுக்கான வாக்குச்சாவடியில் 160 பேர் பதிவேட்டில் கையெழுத்திடாமல் வாக்குப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அதிமுக - திமுகவினர் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிய நிலையில் இருதரப்பிற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் பிரச்சனை ஏற்பட்ட வாக்குச்சாவடிக்கு மறுதேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைக்கப்படும் என தெரிவித்தனர்.