கோவையில் வாக்குச்சாவடிக்குள் நின்று வாக்கு சேகரித்ததாக திமுகவினரும் பாஜகவினரும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாநகராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு துடியலூர் நடுநிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு திமுகவினர் வாக்குப்பதிவு மையத்துக்குள் நின்றவாறு வாக்கு சேகரிக்கின்றனர் என குற்றம்சாட்டி, பாஜக வேட்பாளர் வத்சலா திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார்.
அவருடன் ஆதரவாளர்களும் சேர்ந்து மறியல் செய்த நிலையில், அதே குற்றச்சாட்டை பாஜகவினர் மீது சுமத்தி, திமுகவினரும் சாலை மறியல் செய்தனர். இரு தரப்பையும் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.