ஆசிரியர்களின் நடத்தைகளை பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணித்து உயரதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
பணி வரன்முறை செய்யக்கோரி ஆசிரியர் ஒருவர் தொடர்ந்த வழக்கின் விசாரணையில், வாரத்தில் 14 மணி நேரம் மட்டுமே பணிபுரியும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் ஊதியம் வழங்கப்படுவதாக நீதிபதி குறிப்பிட்டார்.
அவ்வாறு கவுரமான ஊதியம் பெறும் ஆசிரியர்களின் பொறுப்பு, தனியார் பள்ளி ஆசிரியர்களை விட பல மடங்கு அதிமாக இருக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார்.
மேலும், ஆசிரியர்களின் செயல்திறன், பணி நேரங்களை தகுதியான அதிகாரிகளை கொண்டு மதிப்பாய்வு செய்ய அறிவுறுத்திய நீதிபதி, எந்த சூழ்நிலையிலும் பொதுமக்களின் பணத்தை அரசு வீணடிக்கக்கூடாது என்றார்.