கோவை மாவட்டத்தில், லாரியில் ஹேண்ட் பிரேக் போடமல் இயற்கை உபாதைக்காக இறங்கி சென்ற ஓட்டுனர் மீது, அதே லாரி தானாக வந்து மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம் சீலம் குகை பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநரான சுரேஷ் பாபு, அமேசான் நிறுவன பொருள்களை ஏற்றி கொண்டு நள்ளிரவு, சேலத்திலிருந்து கோவை காரமடை பகுதிக்கு சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது காடுவெட்டிபாளையத்தில் இயற்கை உபாதை கழிக்க லாரியில் இருந்து இறங்கிய அவர், லாரியில் ஹேண்ட் பிரேக் போடவில்லை என கூறப்படுகிறது. இதனால் லாரி, தானாக நகர்ந்தது,.
இதனை சுரேஷ் பாபு சுதாரிப்பதற்குள், லாரி அவரது அருகே வந்ததால், லாரியை கைகளால் தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் பாரம் ஏற்றி வந்த லாரி, சுரேஷ் பாபு மீது மோதி ஏறி இறங்கியதில் அவர் நிகழ்விடத்திலேயெ உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர், இவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியானதையடுத்து விபத்து என உறுதி செய்யப்பட்டது.