தொழிற்துறை 4.0 என்ற திட்டத்திற்காக 2 ஆயிரத்து 201 கோடி ரூபாய் செலவில் 71 அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் தொழில்நுட்ப மையங்களாக தயார்படுத்தப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
71 ஐடிஐ மையங்களுக்கும் தலா 31 கோடி ரூபாய் செலவில் புதிய உபகரணங்கள், இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கருவிகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
ITI மாணவர்களுக்கு தொழில்துறையின் தேவைக்கேற்ப அனுபவமிக்க கற்பித்தல் மூலம் தொழில் வழங்குநர்களிடையே வேலைவாய்ப்பை மேம்படுத்தும் திட்டம், உள்ளூர் மற்றும் உலகளாவிய தொழில்துறையின் தேவைக்கேற்ப பயிற்சி, ஆலோசனை மற்றும் வேலை வாய்ப்புச்சூழல் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.