ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் பார்மலின் ரசாயனம் பூசப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா என உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
ராமேஸ்வரம் மீன் மார்க்கெட்டில் கடை கடையாகவும், மொத்த விற்பனை செய்யப்படும் இடங்களிலும் சென்று மீன்களை எடுத்து பார்த்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கெட்டுப்போன மீன்களை பார்மலின் கலந்து பதப்படுத்தி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வியாபாரிகளிடையே எச்சரித்து சென்றனர்.