திருவாரூர் அருகே எண்ணெய்க் குழாய் கசிவால் விளை நிலத்தில் பயிர்கள் பாதித்ததாக விவசாயிகள் குற்றச்சாட்டியதற்கு ஓஎன்ஜிசி அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
மேல எருக்காட்டூர் கிராமத்தில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் எண்ணெய் போன்று கருப்பாக படர்ந்த நிலையில், ஓஎன்ஜிசி குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக இவ்வாறு ஏற்பட்டதாக அவர் புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து நிகழ்விடத்தில் ஆய்வு செய்த ஓஎன்ஜிசி அதிகாரிகள், விளை நிலத்திற்கு அடியில் பதிக்கப்பட்ட குழாய் உடையவில்லை என்றும் அதனால் எண்ணெய் கசிவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
மேலும், அந்நிலத்தின் மண்ணை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி இதற்கான முழுமையான காரணம் கண்டறியப்படும் என்றும் ஓஎன்ஜிசி தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.