நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் பணியாற்றிய போது அவர் தவறான அறிக்கைகளை தாக்கல் செய்ததாக சேகர்ராம் என்பவர் பத்திரிகையாளர் எனக் கூறி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனை அடுத்து, அவர் போலி பத்திரிக்கையாளர் என பொன்.மாணிக்கவேல் குற்றஞ்சாட்டியதை அடுத்து, தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டது. இதன் விசாரணையில், பிரஸ் கவுன்சில் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது.