திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உண்டியல் காணிக்கையாக 96 லட்சத்து 58 ஆயிரத்து 770 ரூயாயும், 3 கிலோ 157 கிராம் தங்கமும் கிடைத்துள்ளது.
கோவிலின் மண்டபத்தில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள், கோவில் பணியாளார்கள் உண்டியல் காணிக்கையை எண்ணினர்.
இதன் பிறகு கோவில் இணை ஆணையர் கல்யாணி காணிக்கை விவரங்களை வெளியிட்டுள்ளார். இதில், கோவில் உண்டியல் காணிக்கையாக வெள்ளி மட்டும் 2 கிலோ 952 கிராம் கிடைத்துள்ளது.