திருநங்கைகள் உள்ளிட்ட 3ஆம் பாலினத்தவரை தேவையின்றி விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்யக்கூடாது என தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் நடைமுறை விதியில் புதிய சட்டத்திருத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக உள்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசிதழில், LGBTQIA எனப்படும் ஒருபால் மற்றும் இருபால் ஈர்ப்பு கொண்டவர்கள், திருநங்கைகள், திருநம்பிகள், இடைப்பட்ட பாலினத்தவர் உள்ளிட்ட பிரிவினை சேர்ந்தவர்களை சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே காவல்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற புதிய விதி காவல்துறை அதிகாரிகள் நடைமுறை சட்டத்தில் சேர்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.