ஆந்திராவிலிருந்து தஞ்சை வழியாக இலங்கைக்குக் கடத்த முயன்ற 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 14 பேரை கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தமிழகம் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. மாவட்ட எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய போலீசார், திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி வந்த லாரி ஒன்றை வழிமறித்து சோதனை மேற்கொண்டனர்.
அதில் சுமார் 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள 250 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவை கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.
மேலும் 3 குழுக்களாகப் பிரிந்து கஞ்சா கடத்தப்படுவதை அறிந்த போலீசார் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, 3 இடங்களில் 3 கார்கள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றில் கடத்தப்பட்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.