தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி தொடர்ந்த வழக்கை அபராதத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வழக்கறிஞர் பாலமுருகன் என்பவர் தொடர்ந்த வழக்கில், அரசு நிர்ணயித்த 13 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணத்துக்குப் பதிலாக 8 லட்ச ரூபாய் வரை மாணவர்களிடம் வசூலிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், எந்த கல்லூரி என்ற அடிப்படை தகவல் இல்லாமல் வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும் வழக்கறிஞர்கள் பொதுநல வழக்கு தொடரக் கூடாது என்ற அறிவுரை மீறப்பட்டுள்ளதாகவும் அதிருப்தி தெரிவித்தனர்.
வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, அத்தொகையை 15 நாட்களில் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு செலுத்த உத்தரவிட்டனர்.