இரு சக்கர வாகனத்தில் நான்கு வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளைக் கொண்டு செல்லும்போது மணிக்கு நாற்பது கிலோமீட்டருக்கும் குறைவான வேகத்தில் தான் செல்ல வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
மத்தியச் சாலைப் போக்குவரத்து அமைச்சகம், நான்கு வயதுக்கும் கீழான குழந்தைகளின் பாதுகாப்பைக் கருதி மோட்டார் வாகன விதிகளில் திருத்தத்தைச் சேர்த்துள்ளது.
அதன்படி இரு சக்கர வாகனத்தில் நான்கு வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளைக் கொண்டு செல்லும்போது பாதுகாப்புக் கச்சையும், தலைக்கவசமும் பயன்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. இந்தப் புதிய விதிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் நாள் நடைமுறைக்கு வரும் என்றும் குறிப்பிட்டுள்ளது.