உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவக்குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
முந்தைய குழுவில் 8 மருத்துவர்கள் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது எய்ம்ஸ் மருத்துவர் சந்தீப் சேத் தலைமையில் 6 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை 154 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாக கூறப்படும் நிலையில், அடுத்தகட்டமாக யார் யாருக்கு சம்மன் அனுப்புவது என்பது குறித்தும், எவ்வாறு விசாரணை நடத்தலாம் என்பது குறித்தும் சென்னை எழிலகத்தில் ஆணையம் சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனையில் அப்போலோ மருத்துவமனை வழக்கறிஞர்கள், சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.