அமைச்சர் சாமிநாதன் தலைமையில் திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்களுக்கும், ஜவுளித்துறை உற்பத்தியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் அங்கு 39 நாட்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
கடந்த நவம்பர் மாதம், கையெழுத்தான புதிய கூலி உயர்வு ஒப்பந்தத்தை ஜவுளித்துறை உற்பத்தியாளர்கள் அமல்படுத்தத் தவறியதாக குற்றம் சாட்டி, ஜனவரி மாதம் முதல் கோயம்பத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 3 லட்சம் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தினமும் 60 கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்பட்ட நிலையில், அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.