கொரோனா சூழலில் தமிழகத்தில் மூடப்பட்ட மழலையர்ப் பள்ளிகள் இரண்டாண்டுகளுக்குப் பின் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அழைத்துச் சென்று விட்டுவந்தனர்...
கொரோனா சூழலில் தமிழகத்தில் 2020 மார்ச் மாதத்தில் மழலையர்ப் பள்ளிகள், விளையாட்டுப் பள்ளிகள், குழந்தைகள் மையங்கள் மூடப்பட்டன.
அதன்பின் கொரோனா பரவல் குறைந்த பின் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் இரண்டு ஆண்டுகளாக மழலையர்ப் பள்ளிகள் திறக்கப்படவில்லை. பிப்ரவரி 12ஆம் நாள் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் மழலையர்ப் பள்ளிகள், விளையாட்டுப் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி 23 மாதங்களுக்குப் பின் இன்று மாநிலம் முழுவதும் மழலையர்ப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளாகத் தொலைக்காட்சி, செல்பேசி பார்த்துக்கொண்டு வீடுகளுக்குள்ளேயே இருந்த பிள்ளைகள் இன்று ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் பள்ளிக்குச் சென்றனர்.
பெற்றோர் அவர்களைப் பள்ளிகளுக்கு அழைத்துச் சென்று விட்டு வந்தனர்.