10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியான நிலையில், அத்தேர்வுகளின் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
மாணவர்களை பொதுத் தேர்வுக்காக தயார்ப்படுத்தவே திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுவதால், இது குறித்து பெற்றோர்களும் மாணவர்களும் அச்சப்பட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று மணி நேரம் மாணவர்கள் தேர்வு எழுத பயிற்சி பெற வேண்டும் என்பதற்காகவும் திருப்புதல் தேர்வு நடத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை, இந்த ஆண்டு கட்டாயம் பாதுகாப்பான நடைமுறையில் பொதுத் தேர்வு நடைபெறும் என கூறியுள்ளது. இதனிடையே, 12ஆம் வகுப்பிற்கு நாளை நடைபெறவிருக்கும் இயற்பியல் திருப்புதல் தேர்வு வினாத்தாளும் வெளியானதாக தகவல் வெளியாகி உள்ளன.