மதுரை மாவட்டம் நல்லிவீரன்பட்டியில் அனுமதியின்றி வீட்டில் தயாரிக்கப்பட்ட பட்டாசு வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உடல்சிதறி பலியாகினார்.
பிரவீன் என்ற இளைஞர் அனுமதியின்றி வீட்டு மாடியில் குடோன் அமைத்து பட்டாசு தயாரித்து விற்பனை செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த அஜீத் என்ற இளைஞர் பட்டாசு வாங்குவதற்காக அங்கு வந்த நிலையில், வீட்டில் பிரவீன் இல்லாததால் அவரது தாய் சாவியை கொடுத்து குடோனில் இருந்து பட்டாசு எடுத்துக் கொள்ளுமாறு கூறியிருக்கிறார்.
அஜீத் குடோனுக்குள் சென்ற அந்த நேரம் பார்த்து திடீரென பட்டாசு வெடித்து சிதறவே, அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினார்.
வீடும் இடிந்து தரைமட்டமான நிலையில், இடிபாடுகளில் சிக்கி 6 மாத குழந்தை உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர். விபத்துக்குள்ளான வீட்டுக்கு அருகில் இருந்த 10க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்ப்பட்டது.
சம்பவமறிந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அனுமதியின்றி பட்டாசு தயாரித்ததாக, பிரவீனின் தாயை கைது செய்த போலீசார் அவரையும், அவரது அண்ணனையும் தேடி வருகின்றனர்.