ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்குச் சொந்தமான 10 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
அந்த கோவிலின் கட்டுப்பாட்டில் உள்ள கத்ரி தயாராம் சிவ்ஜி அறக்கட்டளைக்கு சொந்தமான 58 சென்ட் நிலம் திருச்சி சென்னை நெடுஞ்சாலையில், திருவானைக் கோவில் அருகே உள்ளது.
10 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நிலத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சிலர் இரவோடு இரவாக கட்டிடம் கட்டி ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக புகார் எழுந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த அறநிலையத்துறை அதிகாரிகள் ஜே.சி.பி எந்திரம் மூலம், கட்டிட சுவர்களை இடித்து, ஆக்கிரமிப்பை தடுப்பை நிறுத்தினர்.