தமிழ்நாட்டில் வரும் 17ஆம் தேதி மாலை 6 மணியுடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் நிறைவடைவதாக அறிவித்த மாநில தேர்தல் ஆணையம், குறிப்பிட்ட நேரத்துடன் பரப்புரை முடிவதை அதிகாரிகள் உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளுக்கு வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ஏனைய பிரச்சாரங்கள் அனைத்தையும் வாக்குப்பதிவு முடிவுறும் நேரத்திலிருந்து 48 மணி நேரத்திற்கு முன் கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.