கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மருமகன் திட்டியதால் மனமுடைந்த மாமனாரும் மாமியாரும் விஷமருந்திய நிலையில், மாமியார் உயிரிழந்தார்.
மாப்பிள்ளைகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தமிழ்ச்செல்வன் - சத்தியப்பிரியா தம்பதி. இவர்களுடைய 6 வயது மகன் நீண்ட நேரம் டிவி பார்ப்பதை தமிழ்ச்செல்வன் கண்டிக்கவே, மகனை ஏன் திட்டுகிறீர்கள் என தமிழ்ச்செல்வனை மனைவி சத்யபிரியா கண்டித்துள்ளார்.
மகளும் மருமகனும் சண்டையிட்டுக் கொண்டதைப் பார்த்த சத்யபிரியாவின் தாய் மரகதம் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றுள்ளார். அப்போது எங்கள் சொந்த விஷயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம் என மாமியார் மரகதத்தை தமிழ்ச்செல்வன் கண்டித்தார் என்று கூறப்படுகிறது.
அதனை சத்யாவின் தாய் மரகதம் தனது கணவரான தண்டபாணியிடம் கூறி வேதனையடைந்துள்ளார். இதனால் மனமுடைந்த இருவரும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மரகதம் உயிரிழந்துவிட, தண்டபாணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரையும் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, தமிழ்ச்செல்வனை போலீசார் கைது செய்தனர்.