தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி மகளிருக்கு உரிமைத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் விரைவில் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திண்டுக்கல் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் காணொலி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது உரையாற்றிய அவர், வாக்குறுதிகள் அனைத்தும் உறுதியாக நிறைவேற்றப்படும் என்றும் அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
மேலும், திமுக வெற்றிப்பெற்று விடும் என்பதால் தான் உள்ளாட்சித் தேர்தலை அதிமுக ஆட்சியில் இருந்தபோது நடத்தவில்லை என்றும் குறிப்பிட்டார்.