மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் சகோதரரும், நடிகருமான சிவராஜ்குமார், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள முதலமைச்சர் இல்லத்திற்கு தனது மனைவி கீதாவுடன் வந்திருந்த நடிகர் சிவராஜ்குமார் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புனீத் ராஜ்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
மரியாதை நிமித்தமாக நடிகர் சிவராஜ்குமார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தாக கூறப்படுகிறது.