வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும், தென் தமிழகம் மற்றும் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
நாளைய தினமும் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் அந்த மையம் கூறியுள்ளது. சென்னையில் இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மழைக்கு வாய்ப்பில்லை என கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 8 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.