சிவகங்கை மாவட்டம் கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் துவக்கி வைத்தார்.
கீழடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான அகரம், மணலூர், கொந்தகை ஆகிய இடங்களில் இதுவரை ஏழு கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அதில் ஏராளமான பழங்காலப் பொருட்களும், தொல்லியல் சான்றுகளும் கிடைத்தன. இந்த நிலையில், தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வு பணி துவங்கியுள்ளது.
அதேபோன்று, சோழப்பேரரசின் மாமன்னன் முதலாம் ராஜேந்திரனின் தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தின் நகரமைப்பு மற்றும் கட்டுமானங்களை வெளிக்கொணர்ந்து, அரண்மனையின் வடிவமைப்பை தெரிந்து கொள்ள, கங்கைகொண்ட சோழபுரம், மளிகைமேடு ஆகிய பகுதிகளில் 2ஆம் கட்ட அகழாய்வு பணியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.