திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் கத்தி காட்டி மிரட்டி பெண் வியாபாரியிடம் ஒரு சவரன் தங்கநகையை 3 பேர் பறித்து தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகளின் வெளியாகியுள்ளன.
அம்பத்தூர் அருகே பிரியாணி கடை நடத்தி வரும் ரேணுகாதேவி என்பவரது கடைக்கு வந்த 3 மர்மநபர்கள், கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த செயின் மற்றும் அவர் கணவரிடமிருந்து செல்போனை பறித்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து, ரேணுகா அளித்த புகாரின் பேரில் வழக்குபதிந்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், செயின் பறிப்பில் ஈடுபட்ட பெரம்பூர் சேர்ந்த மெல்வின், குமரகுரு, அர்ஜுன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், நெடுஞ்சாலையில் வெளிமாநில லாரி ஓட்டுனர்களிடம் கத்தியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட மெல்வின் மற்றும் குமரகுரு என்பவர்களை ரோந்து போலீசார் கைது செய்தனர்.