செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

சூடுப்பிடிக்கும் தேர்தல் களம்.. வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு..!

Feb 10, 2022 06:53:25 PM

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி, திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியின் வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 119வது வார்டில் போட்டியிடும் திமுக பெண் வேட்பாளர் பேண்டு வாத்தியங்களுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டில் கவுன்சிலர் பதவிக்காக போட்டியிடும் திமுக பெண் வேட்பாளரின் கணவர், குத்தாட்டம் போட்டு தனது மனைவிக்காக வாக்கு சேகரித்தார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 117வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தியாகராய நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் கூடியிருந்த பாஜகவினரிடம் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 124-வது வார்டில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 129-வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பேண்டு வாத்தியங்கள் வாசித்த படி, வீதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட 7வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தூசி மோகன் உணவகம் ஒன்றில் பரோட்டா தயாரித்து கொடுத்து வாக்கு சேகரித்தார்.  

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 27வது வார்டில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர், பேண்டு வாத்தியங்களுடன் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 40வது வார்டில் போட்டியிடும் அதிமுக பெண் வேட்பாளர் நடனமாடியும், தோசை சுட்டுக் கொடுத்தும் வாக்கு சேகரித்தார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காந்தி பூங்கா அருகே திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். இதே போல, மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்திலும் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement