தமிழ்நாட்டில் 87 சதவீதம் பேருக்கு கொரோனா எதிர்ப்புச் சக்தி உடலில் இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை நடத்திய 4 வது கட்ட ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கியுள்ளார்.
தமிழ்நாட்டு மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பற்றிய ஆய்வுகள் 38 மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன. இதில் 4 ஆம் கட்ட ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஒமைக்ரான் மூன்றாவது அலைக்கு முன்பாக இந்த ஆய்வு நடைபெற்றது.இதில் திருவாரூரில் செரோ பாஸிட்டிவிட்டி அதிகளவில் 93 சதவீதமாக உள்ளது.தமிழ்நாட்டில் பொதுவாக 87 சதவீதம் பேர் நோய் எதிர்ப்பு சக்தியுடன் திகழ்வதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்