தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 336 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 114 இடங்களில் புதிய பாலங்கள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நபார்டு வங்கி நிதியுதவியுடன் ஊரகப்பகுதிகளில் 114 இடங்களில் புதிய பாலங்கள் கட்டப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்ட ஊரகப்பகுதிகளில் புதிய பாலங்கள் கட்டப்படும் எனவும், பாலம் கட்டுமானப் பணியை தொடர்ந்து ஆய்வு செய்யவும், தரமான கட்டுமான பொருட்களை கொண்டு பாலம் கட்டப்படுவதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.