புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பேக்கரியில் திருடச் சென்ற திருடன், சிசிடிவி கேமராவையும் மானிட்டரையும் சேர்த்துத் திருடிச் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.
பிரியா ஸ்வீட்ஸ் அன்ட் பேக்கரி என்ற அந்தக் கடையின் பின்பக்க ஜன்னலின் கண்ணாடியை செங்கல்லால் உடைத்து, அதிலிருந்த கம்பிகள் சிலவற்றை நீக்கி திருடன் ஒருவன் நள்ளிரவில் உள்ளே நுழைந்துள்ளான்.
கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டவன், சிசிடிவி கேமராக்களையும் அதனுடைய மானிட்டரையும் கழற்றி எடுத்துச் சென்றுள்ளான்.
காட்சிகளைப் பதிவு செய்யும் ஹார்ட் டிஸ்கை திருடன் விட்டுச் சென்ற நிலையில், அதில் அவனுடைய முகம் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அதனைக் கொண்டு போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.