நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக அரசு கடந்த செப்டம்பரில் அனுப்பிய மசோதாவை சபாநாயகருக்கு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், ஆளுநர் அது குறித்து விளக்கமளித்துள்ளார்.
இது குறித்த அறிக்கையில், தமிழ்நாடு அரசு அமைத்த உயர்மட்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நீட் விலக்கு மசோதா அமைந்துள்ளதாகவும், அந்த அறிக்கை அனுமானங்களை அடிப்படையாக கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் இலக்கு இல்லாத ஒரு தேர்வு என பொத்தம்பொதுவாகவும், தகுதியற்ற மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர நீட் வழிவகை செய்யும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை ஏற்க முடியாது என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார ரீதியாக செல்வாக்குள்ள மாணவர்களுக்கு மட்டுமே நீட் தேர்வு உகந்தது என்பதுபோல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வின் முக்கியத்துவத்தை உணராமல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.