செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

சூடு பிடிக்கும் பிரச்சாரம்.. வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பு.!

Feb 08, 2022 07:11:33 PM

மிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக, பாஜக, சுயேட்சை வேட்பாளர்கள் தூய்மை பணி மேற்கொண்டு, காய்கறி, பால் விற்பனை செய்தும் வித விதமாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்..

கரூரில் மாநகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று மக்கள் காலில் விழுந்தும், பொன்னாடை போர்த்தியும் வாக்குகளை சேகரித்தனர்.

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து நகைச்சுவை நடிகர் சிசர் மனோகர் வாக்கு சேகரித்தார்.அதேபோல், 11 வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தாமரை பூவை கையில் வைத்து கொண்டு வாக்கு சேகரித்தார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வளசரவாக்கம் மண்டலத்தின் 144ஆவது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர், வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சென்னை புளியந்தோப்பு பகுதியில் 77 வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் உணவு கடையில் ஆப்பம் சுட்டு வாக்கு சேகரித்தார். அதேபோல், அதிமுக சார்பில் களம் காணும் வேட்பாளர் மீன் விற்று ஆதரவு திரட்டினார்.

புதுக்கோட்டை நகராட்சி 9வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் பால் விற்பனை செய்து வாக்கு சேகரித்தார். அதேபோல் 27 வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அந்த தொகுதிக்குட்பட்ட பகுதியில் துப்புரவு பணியாளர்களுடன் சேர்ந்து துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சென்னை இராயபுரம் 52 வது வார்டில் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் காய்கறி விற்பனை செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 46-வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக முன்னாள் எம்.எல்.ஏ., சைக்கிளில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் பூ கட்டிக் கொடுத்தும், தேநீர் கடையில் தேநீர் தயார் செய்து கொடுத்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் மாநகராட்சியில், வெவ்வேறு வார்டுகளில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தாயும் மகனும் போட்டியிடும் நிலையில், தாய்க்காக மகனும், மகனுக்காக தாயும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்..

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம் மண்டலத்தின் 49வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வடை சுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி 21 வது வார்டில் போட்டியிடும் மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி வேட்பாளர் காய்கறி வியாபாரம் செய்தும், தூய்மை பணி மேற்கொண்டும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement