வேலூர் மாநகராட்சி பாமக வேட்பாளரை திமுகவினர் கடத்தி சென்று மிரட்டியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ள நிலையில், அதற்கு திமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாநகராட்சி 24-ஆவது வார்டு பாமக வேட்பாளர் பரசுராமன் திமுகவினரால் கடத்தப்பட்டு மிரட்டப்பட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த அணைக்கட்டு திமுக எம்.எல்.ஏ., ஏ.பி.நந்தகுமார், பரசுராமன் திமுக அலுவலகத்துக்கு நேரில் வந்து தான் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட விரும்புவதாக தெரிவித்து திமுக நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து சென்றதாக விளக்கமளித்தார்.
இந்நிலையில், பரசுராமன் திமுக அலுவலகத்துக்கு வந்து நிர்வாகிகளை சந்தித்து சால்வை அணிவிக்கும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.