தமிழகத்தின் எல்லையில் உள்ள நகரித் தொகுதியில் தமிழ் வழிக்கல்விக்கு தேவையான புத்தகங்களை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார்.
நகரி, சித்தூர், நெல்லூர் உள்ளிட்ட தொகுதிகளில் வசிக்கும் தமிழர்கள், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வருவதாக கூறிய அவர், அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கவும் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.