கமுதி பேரூராட்சி 14வது வார்டில் பாஜக வேட்பாளர் திருமதி சத்யஜோதி ராஜா போட்டியின்றித் தேர்வானதன் மூலம் பாஜக-விற்கு தமிழக மக்கள் முதல் வெற்றியை அளித்துள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, கோயம்புத்தூர் மக்கள் தேசியத்தின் பக்கம் உள்ளதாகத் தெரிவித்தார். மேலும் நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது அல்ல என்றார்.