செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

போட்டிப்போட்டு வாக்குசேகரிப்பு.. ஹாக்கி விளையாடியும், டீ தயாரித்தும் பிரச்சாரம்..!

Feb 07, 2022 06:25:53 AM

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஹாக்கி விளையாடியும், தேநீர் போட்டுக் கொடுத்தும் வித விதமாக பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

சென்னை மந்தைவெளி விசாலாட்சி தோட்டத்தில் வீடு வீடாக சென்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

 சென்னை ஆலந்தூர் மண்டலத்தில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் போட்டிப்போட்டு வாக்குகளை சேகரித்தனர். மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுடன், ஹாக்கி விளையாடிய திமுக, அதிமுக வேட்பாளர்கள் அவர்களுக்கு துண்டு அணிவித்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.

 மதுரை திருப்பரங்குன்றத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தனர்.

 திருப்பூர் மாநகராட்சியில் அரசியல் கட்சிகள் சார்பிலும், சுயேட்சையாகவும் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

 புதுக்கோட்டையில் மண்டபம் ஒன்றில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதேபோல், டீக்கடையில் பொதுமக்களுக்கு டீ போட்டு கொடுத்தும், உணவகத்தில் தோசை சுட்டும் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தார்.

இதனிடையே, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கோடம்பாக்கம் மண்டலத்தின் 112ஆவது வார்டில் பாஜக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர், தனி நபராக வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

 

கோவை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு ஒன்றில் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த டோனி சிங் என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த இவர் சுமார் 60 ஆண்டுகளாக கோவையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், டோனி சிங்கிற்கு ஆதரவு தெரிவித்து அவரது தோழர்களான இயக்குநர் பாக்கியராஜ், நடிகர் நிழல்கள் ரவி ஆகியோர் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

 

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு ஒன்றில் போட்டியிடும் திமுக பெண் வேட்பாளர், பொதுமக்களுக்கு மீன்களை வெட்டிக் கொடுத்தும், தேநீர் தயாரித்துக் கொடுத்தும் வாக்குகளை சேகரித்தார்.

 

கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட வார்டு ஒன்றில் அதிமுக பெண் வேட்பாளர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement