நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12 ஆயிரத்து 838 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் வரும் 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. இதற்காக கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் 4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
மொத்தம் 74 ஆயிரத்து 416 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இன்று வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள். தொடர்ந்து இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வெளியிடப்படும். மேலும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்படும்.